அமெரிக்காவில் 70 ஏக்கர் நிலம் வாங்கிய புலம்பெயர்ந்தோர்: 40 ஆண்டுகளாக செய்து வந்த ரகசிய செயல் வெளியானது
அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்ற ஒருவர், அங்கு 70 ஏக்கர் நிலம் வாங்கி, 40 ஆண்டுகளாக அதைத் தோண்டிவந்துள்ளார்.
நிலம் வாங்கிய நோக்கம்
இத்தாலிக்குச் சொந்தமான சிசிலித் தீவிலிருந்து 1905ஆம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்குச் சென்ற பல்தசாரே (Baldassare Forestiere) என்னும் புலம்பெயர்ந்தோர், அங்கு எலுமிச்சைத் தோட்டம் அமைக்கலாம் என 70 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.
Credit: Getty
ஆனால், அதற்குப் பிறகுதான் பல்தசாரேக்கு புரிந்திருக்கிறது, கலிபோர்னியாவிலுள்ள வெப்பநிலையில், அங்கு பண்ணை அமைப்பது கடினம் என்பது.
ஆனாலும் மனம் தளராமல் 20 அடி ஆழம் வரை தோண்டியதும், அங்கு நல்ல மண் இருப்பதைக் கண்டுள்ளார் பல்தசாரே. இன்னொரு பக்கம் அங்குள்ள வெயிலை அவரால் தாங்கமுடியவில்லை.
Credit: Getty
40 ஆண்டுகளாக செய்துவந்த ரகசிய வேலை
வெயில் தாங்க முடியாமல், தான் வசிப்பதற்கு நிலத்துக்கு அடியில் ஒரு அறையை உருவாக்கியுள்ளார். அத்துடன் நில்லாமல், தொடர்ந்து தோண்டி, நிலத்துக்கு அடியிலேயே எலுமிச்சை வகை மரங்களை வளர்த்திருகிறார் அவர்.
பகலெல்லாம் வேலைக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பியதும் தோட்ட வேலை செய்திருக்கிறார். அவர் எதிர்பார்த்ததுபோலவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு மரங்கள் பழங்களைக் கொடுக்க, வேலையை விட்டுவிட்டு, அவற்றை விற்கத் துவங்கியுள்ளார் பல்தசாரே.
Credit: Getty
அப்படி தொடங்கியது, 40 ஆண்டுகள் தொடர்ந்து பூமிக்கடியில் பள்ளம் தோண்டியிருக்கிறார். பெரிய பண்ணை, தனக்கொரு வீடு என பிரம்மாண்டமான கட்டிடங்களை பூமிக்கடியில் கட்டியிருக்கிறார் பல்தசாரே.
அவர் தொடர்ந்து பூமிக்கடியில் தோண்டிக்கொண்டே இருப்பதைப் பார்த்த உள்ளூர் மக்கள், அவர் ஒரு பெண் மீதான காதலால் அவதியுற்றுவருவதாக வதந்தி பரப்பியிருக்கிறார்கள்.
Credit: Getty
அடுத்தபடியாக பொதுமக்கள் வெயில் காலத்தில் தங்குவதற்காக பூமிக்கடியில் ரிசார்ட் ஒன்றை உருவாக்குவது என திட்டமிட்டுள்ளார் அவர். ஆனால், அது கட்டி முடிக்கப்படுவதற்குள் அவர் மரணமடைந்துவிட்டார்.
Credit: Getty
அவரது மறைவுக்குப் பின், அவரது சகோதரர் குடும்பம் அந்த இடத்தை தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளது. தற்போது, அந்த ரகசிய பண்ணை, வீடு முதலானவை மக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |