ஜனாதிபதி யூன் சுக் யோலை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி! போராட்டம் வெடிக்கலாம் என அச்சம்
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது.
அவசர நிலை பிரகடனம்
யூன் சுக் யோல் அமுல்படுத்திய அவசர நிலை பிரகடனம் மக்களின் கிளர்ச்சிக்கு பின் நீக்கப்பட்டது.
அதன் பின்னர் ஜனாதிபதி யூன் சுக் யோல், ராணுவ ஆட்சியை இனி அமுல்படுத்தப்போவதில்லை எனக்கூறி மக்களிடம் வருத்தம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி யூன் சுக் யோலை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தீர்மானம் தோல்வி
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற நிலையில், யூன் சுக் யோலை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆளுங்கட்சி அமைச்சர்கள் புறக்கணித்தனர்.
இதன் காரணமாக ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வியடைந்தது. இதனால் பொதுமக்களின் போராட்டம் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |