ராணுவ ஆட்சியை மீண்டும் அமுல்படுத்தமாட்டேன்! மக்களிடம் மன்னிப்பு கோரிய தென்கொரிய ஜனாதிபதி
தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை மீண்டும் அமுல்படுத்த மாட்டேன் என ஜனாதிபதி யூன் சுக் யோல் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை அமுல்படுத்திய ஜனாதிபதி யூன் சுக் யோல், அடுத்த ஆறு மணிநேரத்தில் அதனை திரும்பப் பெற்றார்.
வடகொரியாவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், நாட்டின் நிர்வாகத்தை குறுக்கீடு செய்வதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து அவர் இந்த நடவடிக்கையை எடுத்தார்.
இந்நிலையில் யூன் சுக் யோல் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் தென் கொரியாவில் மீண்டும் ராணுவ ஆட்சியை அமுல்படுத்த மாட்டேன் என்றார்.
மேலும், தனது அறிவிப்பு பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தியதற்கு உண்மையில் வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |