தங்கமோ, வைரமோ இல்லை! 27 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்ட ஆபரணம்..என்ன தெரியுமா?
மியான்மரில் கிடைக்கக்கூடிய Jadeite என்ற பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆபரணம் ஏன் விலையுயர்ந்தது என்று இங்கு பார்ப்போம்.
Imperial green
ஆசிய நாடான மியான்மரில் Asian Gemstone என்று அழைக்கப்படும் பச்சை நிற கற்கள் கிடைக்கின்றன. 
ஆசியாவில் 70 சதவீதம் இந்நாட்டில் உள்ளன. மீதம் ஜப்பான், கடமாலா, கலிபோர்னியா, ரஷ்யா மற்றும் கஜகஸ்தானில் காணப்படுகிறது.
Jadeite பச்சை நிறத்தில் இருப்பதனால் இதனை Imperial green என்று இதனை கூறுவர். இதன்மூலம் உருவாக்கப்பட்ட ஜேட் ஆபரணம் மிகவும் புகழ்பெற்றதாகும்.
ஏனென்றால், அதனை அணிந்தது பார்பரா ஹுட்டன் என்ற மகாராணி.
அந்த நெக்லஸ் ஆபரணத்தின் பெயர் Hutton Mdivani. இதில் 27 பாரிய Jadeite கற்கள் உள்ளன. 
தங்கத்தை விட விலைமதிப்பானது
Woolworth சாம்ராஜ்ஜியத்தின் வாரிசான பார்பரா ஹுட்டன் விலை மதிப்பற்ற இந்த ஆபரணத்தோடு பல விலையுயர்ந்த நகைகளையும் பெற்றிருந்தார். இதற்காகவே அவர் சரித்திர புகழ் பெற்றிருந்தார்.
2024ஆம் ஆண்டு இந்த ஆபரணம் 27 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டது. Jadeiteயின் ஒரு காரட் அளவானது 926 அவுன்ஸ் தங்கத்திற்கு இணையானது ஆகும்.
எனவே இது தங்கத்தை விட விலைமதிப்பானது. இந்த Imperial Jadeite வகை நல்ல பச்சையாகவும், பளிச்சென்றும் இருக்கக்கூடியது. அதனால் அதிக மக்களால் விரும்பக்கூடியதாக இருக்கிறது. இது உருவாக அதிக அழுத்தமும், குறைந்த வெப்பமும் தேவைப்படுகிறது.
அதேபோல் இதில் Nephrite என்ற இன்னொரு வகையான Jadeite-வும் உள்ளது. இது பைராக்சீன் என்ற உயர்ந்த மினரல் வகையைச் சேர்ந்தது என்பதால், வைரத்தை விட மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
ஆனால் இது சுலபமாகக் கிடைக்கூடியது என்பதால் விலை குறைவுதான். மேலும் இதில் பல நிறங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |