திருப்பதியில் விஐபிக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிடவேண்டும்.., பவன் கல்யாண் பேச்சு
திருப்பதி கோவிலில் விஐபிக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிடவேண்டும் என்று ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
பவன் கல்யாண் பேசியது
திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10-ம் திகதி முதல் 19-ம் திகதி வரை பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்கு இலவச தரிசன டோக்கன் பெறுவதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஆறு பக்தர்கள் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். மேலும், சில பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.
இதில், தமிழக மாவட்டமான சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்து நடந்த பைராகிபட்டா என்ற இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் இது தொடர்பாக பேசுகையில், "சாமானிய மக்களின் நடைமுறைகளை கையாளுவதற்கான வழிமுறை இது இல்லை. திருப்பதி கோவிலில் விஐபிக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிடவேண்டும்.
அதற்கு பதிலாக சாமானிய மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். இதனை தேவஸ்தானத்தின் தலைவருக்கு நான் வேண்டுகோளாக விடுக்கிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |