இம்ரான் கான் மரண வதந்தி: மறுத்த பாகிஸ்தான் அரசு: வாக்குறுதி கொடுத்த காவல்துறை
மரண வதந்திகள் மற்றும் குடும்ப்த்தினரின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி இம்ரான் கானின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.
இம்ரான் கான் குறித்து பரவிய மரண வதந்தி
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இம்ரான் கான் இறந்து விட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆப்கானிஸ்தான் டைமஸ் ஊடகத்தில் வெளியான செய்தியில், ஆடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 72 வயது இம்ரான் கான், சிகிச்சை மறுக்கப்பட்டதால் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தாத ஆதராரங்களை குறிப்பிட்டு அறிவித்தது.
அத்துடன் அவரது உடல் ஆடியாலா சிறையில் இருந்து ரகசியமாக அகற்றப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதைப்போல பலுசிஸ்தான் வெளியுறவுத்துறை தன்னுடைய X தளத்தில் வெளியிட்ட தகவலில், இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டு விட்டதாகவும், இதற்கு அந்நாட்டின் ISI மற்றும் இராணுவத் தலைவர் ஜெனரல் ஆசிம் முனிர் ஆகியோர் தான் சதி செய்ததாக தெரிவித்தது.
சகோதரிகள் குற்றச்சாட்டு
இந்நிலையில் இம்ரான் கானின் 3 சகோதரிகளான நொரீன் நியாசி, அலீமா கான் மற்றும் டாக்டர் உஸ்மா கான் ஆகியோர் தங்கள் சகோதரரை சந்திக்க மூன்று வாரமாக முயற்சி செய்தும் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இது அவரது உடல்நிலை குறித்த கவலையை அதிகரிக்க செய்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
🚨#BreakingNews:
— Afghanistan Times (@TimesAFg1) November 26, 2025
A credible source from Pakistan has confirmed to Afghanistan Times that PTI Chairman Imran Khan has allegedly been mysteriously killed, and his body has been moved out of the prison.#PTI #AfghanistanAndPakistan pic.twitter.com/FpJSrksXHA
மேலும் ராவல்பிண்டியில் உள்ள ஆடியாலா சிறைக்கு அருகே தாங்கள் அரசு காவலர்களால் தாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வதந்திகளை மறுத்த பாகிஸ்தான் அரசு
இந்நிலையில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானின் மரணம் தொடர்பாக வெளியான ஆப்கானிஸ்தான் டைம்ஸ் செய்தியின் அறிக்கையை முற்றிலுமாக பாகிஸ்தான் அரசு நிராகரித்துள்ளது.
இம்ரான் கானின் பழைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தான் அரசு இம்ரான் கான் மரணம் தொடர்பான செய்தியை மறுத்துள்ளது.
போராட்டத்தை வாபஸ் பெற்ற சகோதரிகள்
வதந்திகளை தொடர்ந்து கோரக்பூர் சோதனைச் சாவடியில் போராட்டத்தில் களமிறங்கிய இம்ரான் கானின் சகோதரி அலீமா கான் மற்றும் PTI ஆதரவாளர்களுடன் காவல்துறை தீவிரமான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளிருப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
காவல்துறை வழங்கிய உறுதியில் இம்ரான் கானை நேரில் சந்திப்பதற்கு அவரது குடும்பத்தினருக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |