உலகின் மகிழ்ச்சியான நாடாக நார்வே தொடர இதுதான் காரணம்! இணையத்தில் வைரல் வீடியோ
நார்வே நாட்டின் குறைந்த நேர பணி சூழலை விளக்கும் காணொளி காட்சி ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
குறைவான வேலை நேரம்
இந்திய கடல் தொழில்நுட்ப வல்லுநரான சச்சின் டோக்ரா என்ற நார்வே நாட்டின் குறைந்த நேர பணி சூழல் குறித்து இணையத்தில் வெளியிட்ட வீடியோ தீவிரமான விவாதத்தை தூண்டியுள்ளது.
“Corporate working hours in Europe” என்ற தலைப்பில் சச்சின் டோக்ரா வெளியிட்ட வீடியோவில், ஸ்காண்டிநேவிய நாடான நார்வேயில் நிலவும் 7.5 மணி நேரம் மட்டுமே இருக்கும் பணிச் சூழல் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
7.5 மணி நேரம் பணிச்சூழல், லேசான அணுகுமுறை ஆகியவையே மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே மீண்டும் மீண்டும் முதலிடம் பிடிப்பதற்கு முதல் காரணம் என தெரிவித்துள்ளார்.
நார்வேயின் பொதுவான நடைமுறை
சச்சின் டோக்ரா பகிர்ந்த வீடியோவில், நார்வேயில் பல்வேறு நிறுவனங்கள் 7.5 மணி நேரம் வேலைப் பகுதியை கொண்டிருப்பதாகவும், அவற்றில் முக்கிய நேரங்கள்(Core hours) மற்றும் நெகிழ்வு நேரங்கள்(Flexible hours) என்ற பிரிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த முக்கிய நேரங்களில், அனைத்து ஊழியர்களும் அலுவலக கூட்டங்களுக்காகவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பிற்காகவும் கட்டாயம் இருக்க வேண்டும்.
நெகிழ்வு நேரங்களில், ஊழியர்கள் தங்களுக்கான பணியை அவர்களுக்கு விருப்பமான நேரத்தில் முடித்து கொள் அனுமதிக்கப்படுகிறது.
இந்த நடைமுறை, ஊழியர்களை அவரது வாழ்க்கையை சுற்றி அவர்களது பணிக் கடமைகளை திட்டமிட சுதந்திரம் அளிப்பதாக சச்சின் டோக்ரா தெரிவித்துள்ளார்.
இந்த மனப்பான்மை தான் நார்வே-வை உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக வைப்பதற்கு காரணமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வைரலான வீடியோ
சச்சின் டோக்ராவின் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வரை 1.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கானோர் இந்த வீடியோவில் கீழ், இந்தியாவின் வேலை நேரத்தையும், நார்வேயின் வேலை நேரத்தையும் ஒப்பிட்டு மிகப்பெரிய உரையாடலை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |