நான் குடிச்சிட்டு வந்தேன்! ஃபைன்லா கட்ட முடியாது.. சென்னையில் குடிபோதையில் பொலிசாரிடம் ரகளை செய்த பெண்
சென்னையில் குடிபோதையில் இளம்பெண் ஒருவர் பொலிசாரிடம் ரகளை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை மாநகர பொலிசார் வழக்கம் போல வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் சாலையின் ஓரத்தில் அசாதாரணமாக இருந்த இளம்பெண் ஒருவர் தனது பைக்கை நிறுத்திக் கொண்டு, அழுது கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட பொலிசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது அவர் மது அருந்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவரை அழைத்து மது அருந்துபவர்களை பரிசோதிக்கும் கருவியில் ஊதுமாறு கூறினர். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில், இந்த கருவியில் பலூன் ஊதுவது போன்று ஊதுமாறும் எந்தவித அபராதமும் விதிக்காமல் உங்களை விட்டுவிடுகிறோம் என்று கூறியபோது அதன் பின் அந்தப் பெண்ணும் ஊதியதில், அவர் தலைக்கேறிய போதையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பொலிசார் வாகனத்தை விட்டுவிட்டு வீட்டுக்கு செல்லுமாறும், காலையில் வந்து வாகனத்தை எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர்.
அதற்கு அந்த இளம்பெண், “ஆம், நான் ஓசியில் தான் குடிக்கப் போகிறேன். தினமும் இந்த வழியில்தான் குடிக்கச் செல்கிறேன். இன்னைக்கு மட்டும் எதற்கு பிடிக்கறீர்கள்..? என்னிடம் காசு ஏதுமில்லை. ஊதினால் விட்டு விடுகிறேன் என சொன்னீர்கள் தானே, இப்ப எதுக்கு ஃபைன் போடுறீங்க..? என்று கூறி ரகளை செய்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாகி பரவி வருகின்றது.