அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 96,000 இந்தியர்கள் கைது: இந்த மாநிலங்கள் தான் அதிகமாம்
கனடா மற்றும் மெக்சிகோவின் எல்லை வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்கள்
கனடா மற்றும் மெக்சிகோவின் எல்லை வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2020 -ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற 19,883 இந்தியர்களும், 2021 -ம் ஆண்டு அதிகரித்து 30,662 இந்தியர்களும், 2022 -ம் ஆண்டு 63,927 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரம் கூறுகிறது.
அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியர்கள்
இந்நிலையில், இந்த ஆண்டு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என அமெரிக்க சுங்க மற்றும் எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த புள்ளிவிவரம் ஒக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை எடுக்கப்பட்டது ஆகும்.
கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிகமாகும். இதில், கனடாவின் எல்லை வழியே நுழைய முயன்ற 30,000 பேரும், மெக்சிகோ எல்லை வழியே நுழைய முயன்ற 41,000 பேரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, பஞ்சாப், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |