ரஷ்ய படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: புடின் அதிரடி உத்தரவு!
ரஷ்ய படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புடின் ஆணை.
ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு.
ரஷ்ய ராணுவ படைகளின் பலத்தை 1.9 மில்லியனில் இருந்து 2.04 மில்லியனாக உயர்த்துவதற்கான ஆணையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழன்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் கிட்டத்தட்ட 182 நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த தாக்குதலில் 48,000க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
getty
இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்தில் ஆயுதப் படை வீரர்களின் எண்ணிக்கையை 1.9 மில்லியனில் இருந்து 2.04 மில்லியனாக உயர்த்துவதற்கான ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் வியாழன்கிழமை கையெழுத்திட்டார்.
அதனடிப்படையில் 137,000 இராணுவ வீரர்களின் அதிகரிப்பு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆயுதப் படைகளின் ஊழியர்கள் மொத்தம் 2,039,758 அலகுகள், அவர்களில் 1,150,628 பேர் முழுநேர இராணுவப் பணியாளர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.
EPA
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் ஓட்டுநர் சட்டத்தில் மாற்றம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!
ராணுவ வீரர்களின் எண்ணிக்கை கடைசியாக நவம்பர் 2017 இல் விரிவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.