ராமர் கோவில் திறப்பு விழா : அயோத்தியில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், இதனால் பல்வேறு தொழில்கள் லாபம் அடைந்து வருகின்றன.
எனவே விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலாத் தொழில்கள் இணைந்து 20,000 வேலைகளை உருவாக்கியுள்ளன.
அயோத்தியில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு
வரும் மாதங்களில், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், வேலை வாய்ப்புகள் சீராக உயரும் என்று தொழில்துறையினர் கணித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பின் விளைவாக தங்குமிடம் மற்றும் பயண சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும்.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும் விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் 20,000 முதல் 30,000 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என TeamLease நிறுவனத்தின் தலைவர் பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.
விருந்தோம்பல் நிர்வாகம், உணவகம் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள், மற்றும் ஓட்டுநர் பதவிகளில் ஆயிரக்கணக்கான புதிய வேலைகள் காணப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அயோத்தியைத் தவிர, லக்னோ, கான்பூர் மற்றும் கோரக்பூர் போன்ற அருகிலுள்ள நகரங்களிலும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |