என்ன பா சொன்ன.. கேலி செய்த வங்கதேச வீரருக்கு தரமான பதிலடி கொடுத்த கோலி! வைரல் வீடியோ
இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் சிராஜிடம் வாக்குவாதத்தில் இறங்கிய வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் அடுத்த பந்திலேயே ஸ்டெம்புகள் தெறிக்க விக்கெட்டை பறிகொடுத்த சம்பவம் இந்திய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியா- வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது, கேப்டன் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஜாகீர் அகமது சவுத்ரி மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 90 ஓட்டங்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 86 ஓட்டங்களையும், அஸ்வின் 58 ஓட்டங்களையும் குவித்து இருந்தனர்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
சீராஜை சீண்டிய வங்கதேச வீரர்
404 என்ற முன்னிலை ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியினர், அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற வங்கதேச அணி களத்தில் தடுமாற்றத்துடன் காணப்பட்டது.
வங்கதேச அணி 5 ஓட்டங்கள் எடுத்து இருந்தபோதே 2 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாற்றத்துடன் காணப்பட்டது, அப்போது களத்தில் இறங்கிய வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார்.
இந்திய வீரர்களின் பந்துகளை ஆரம்பமே பவுண்டரிகளுக்கு விரட்டிய லிட்டன் தாஸ் 30 பந்துகளில் 5 பவுண்டரிகள் விளாசி 24 ஓட்டங்கள் சேர்த்து இருந்தார். இந்நிலையில் பந்துவீச வந்த இந்திய வீரர் சிராஜ்-க்கும் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ்-க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Test cricket is special with Virat Kohli. What a moment! pic.twitter.com/QM8isNqUl9
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 15, 2022
சிராஜை பார்த்து எனக்கு எதுவும் கேட்கவில்லை என்று சைகை காட்ட, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லிட்டன் தாஸ் எதிர் கொண்ட அடுத்த பந்திலேயே ஸ்டெம்புகள் தெறிக்க விக்கெட்டை கழற்றி, லிட்டனை பெவிலியன் திருப்பி அனுப்பினார்.
லிட்டன் தாஸின் வெற்றியை சிராஜ் ஒருப்புறம் கொண்டாட, விராட் கோலி தனக்கே உரித்தான பாணியில் லிட்டன் தாஸ் என்ன செய்தாரோ அதையே மீண்டும் செய்து காட்டி லிட்டன் தாஸை வழியனுப்பி வைத்தார்.
இந்நிலையில் இந்திய வீரரிடம் கேலி செய்த லிட்டன் தாஸை அவரது பாணியிலேயே அனுப்பி வைத்த கோலி மற்றும் சிராஜின் செயல்கள் இந்திய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.