வங்கதேச தொடரில் இருந்து 3 இந்திய வீரர்கள் விலகல்: அணிக்கு உகந்ததல்ல என பயிற்சியாளர் டிராவிட் கருத்து
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உட்பட மூன்று இந்திய வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
தொடரை வென்ற வங்கதேசம்
மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மிர்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி கொண்டது.
நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
விலகும் இந்திய வீரர்கள்
கடந்த போட்டியில் கையில் இரத்தம் சொட்ட சொட்ட போராடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
Rohit Sharma- ரோகித் சர்மா
இவருடன் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் குல்தீப் சன் ஆகியோரும் காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், வீரர்கள் சிலர் காயத்தால் அவதிப்படுகிறார்கள், அணிக்கு அது உகந்ததல்ல.
ரோஹித் சர்மா மும்பைக்கு திரும்பியுள்ளார், அங்கு மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியுமா, முடியாதா? என்பதை வெளிப்படுத்துவார்.
அத்துடன் தீபக் சாஹர் நிச்சயமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்றே கருதுகிறேன், குல்தீப் சன் தொடரில் இருந்து விலகியுள்ளார் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.