இந்தியாவின் வெற்றிக் கனவை தகர்த்த ஹென்ரிச் கிளாசென்: அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி!
கட்டாக்கில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில், தொடரின் இரண்டாவது ஆட்டம் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
எனவே முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்தியா, ஆரம்பமே அணியின் தொடக்க ஆட்டகாரரான ருதுராஜ் கெய்க்வாட்டின் விக்கெட்டை பறிகொடுத்தது.
இருப்பினும் அடுத்து களத்தில் நின்ற இஷான் கிஷான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்டத்தை சீராக உயர்த்தினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட்களை இழந்து மொத்தம் 148 ஓட்டங்களை சேர்த்தது. இந்திய அணியின் பேட்டிங்கில் அதிகப்பட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 40 ஓட்டங்கள் குவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, தொடக்க வீரரான தேம்பா பாவுமாவை தவிர மற்ற முன்னணி வீரர்கள் அனைவரையும் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சீரான இடைவேளியில் பறிக்கெடுத்தது.
இருப்பினும் 5வது விக்கெட்க்கு கேப்டன் தேம்பா பாவுமாவுடன் இணைந்த ஹென்ரிச் கிளாசென் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாப்பக்கமும் சிதறடித்து 46 பந்துகளில் 81 ஓட்டங்கள் குவித்தார்.
இதனால் தென்னாப்பிரிக்க அணி 18.2 ஓவர்கள் முடிவிலேயே 6 விக்கெட்களை மட்டும் இழந்து, 149 ஓட்டங்கள் என்ற வெற்றி இழக்கை எட்டியது.
தொடரின் முதல் போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று இருப்பதன் முலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: சோவியத் கால ஏவுகணைகளுக்கு திரும்பும் ரஷ்யா: ஆயுதங்கள் தீர்ந்து வருவதால் உக்ரைன் வெற்றியில் தாமதம்!
இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி அடைந்ததற்கு முக்கிய காரணமான ஹென்ரிச் கிளாசென் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.