சோவியத் கால ஏவுகணைகளுக்கு திரும்பும் ரஷ்யா: ஆயுதங்கள் தீர்ந்து வருவதால் உக்ரைன் வெற்றியில் தாமதம்!
உக்ரைன் படைகளின் தொடர்ச்சியான வான் தடுப்பு தாக்குதலால், ரஷ்யாவிடம் தற்கால அதிநவீன வான் தாக்குதல் ஏவுகணை ஆயுதங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரானது கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான இந்த ராணுவ மோதல்கள் முடிவில்லா நிலையை அடைந்துள்ளன.
தற்சமயத்தில் ரஷ்யாவின் தாக்குதலானது உக்ரைனின் தெற்குப் பகுதி நகரமான சிவெரோடோனெட்ஸ்கில் (Sieverodonetsk) இடைவிடாது நடைப்பெற்று வருகிறது.
இந்தநிலையில் பிரித்தானிய பாதுகாப்பு பிரிவின் உளவுத் துறை தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், உக்ரைன் முழுவதும் அந்த நாட்டு ராணுவம் நடத்திய தொடர்ச்சியான வான் தடுப்பு தாக்குதலால், ரஷ்யாவிடம் தற்கால அதிநவீன வான் தாக்குதல் ஏவுகணைகளில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் ரஷ்யா தற்போது 1960ம் ஆண்டின் சோவியத் கால ஏவுகணைகளை பயன்படுத்த தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த 1960ம் ஆண்டு கால Kh-22 சோவியத் ஏவுகணைகள் பொதுவாக விமான தாங்கி கப்பல்களை அழிக்கப் பயன்படுத்தப்பட்டவை, இதனை ரஷ்ய தற்போது ஏவுகணைகளின் தட்டுப்பாட்டால் நிலப்பரப்புகளில் நடத்தப்படும் தாக்குதலுக்கு பயன்படுத்த தொடங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: தீர்ந்து வரும் வெடிமருந்துகள்...உக்ரைனில் வேகமாய் முன்னேறும் ரஷ்ய படைகள்: அதிகரிக்கும் பதற்றம்!
மேலும் அறிக்கைகளின் தகவல் அடிப்படையில், விமான தாங்கி கப்பலை அழிக்கும் ஏவுகணைகளை ரஷ்யா நிலப்பரப்புகளில் பயன்படுத்துவதால், துல்லியமற்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள் உயிரிழப்பும் அதிகரிப்பதாக தெரிவந்துள்ளது.