சஞ்சு சாம்சன் அடித்த பந்தால் வலியால் துடித்த நடுவர் - ஒரே சிக்ஸில் 2 சாதனை பட்டியலில் இடம்
ஒரே சிக்சர் விளாசியதன் மூலம்சஞ்சு சாம்சன் 2 சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
IND vs SA 5வது T20
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையேயான 5வது T20 போட்டி இன்று அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 22 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 37 ஓட்டங்கள் எடுத்தார்.
வலியால் துடித்த நடுவர்
சஞ்சு சாம்சன் அடித்த பந்து ஒன்று நடுவர் ரோஹன் பண்டிட்டின் வலது காலில் பட்டதில், அவர் வலியால் துடித்து மைதானத்தில் படுத்தார்.

மருத்துவ ஊழியர்கள் சிறுது நேரம் அவருக்கு சிகிச்சை அளித்த பின்னர், மீண்டும் தனது நடுவர் பணியை தொடர்ந்தார்.
That one must have hurt. 🩹@IamSanjuSamson times this one sweetly and the ball rockets off the bowlers hand and umpire Rohan Pandit cops a nasty blow to his shin. 🫣😵💫#INDvSA 5th T20I | LIVE NOW 👉 https://t.co/adG06ykx8o pic.twitter.com/T4XdtqK9jA
— Star Sports (@StarSportsIndia) December 19, 2025
சஞ்சு சாம்சன் சாதனை
இதில் சஞ்சு சாம்சன் 2வது ஓவரில் ஒரு சிக்ஸர் விளாசியதன் மூலம், 2 சாதனை பட்டியலில் இடம் பிடித்தார்.
இதன் மூலம், இந்திய அணிக்காக T20 போட்டிகளில் 1,000 ஓட்டம் எடுத்த வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்தார்.

இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 1,000 ஓட்டங்களைக் கடந்த 14வது இந்திய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.
ரோஹித் சர்மா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். சமீபத்தில் 13 வது வீரராக அபிஷேக் சர்மா இந்த பட்டியலில் இடம் பிடித்தார்.
இதே போல் ஒட்டுமொத்த T20 போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்த 7வது இந்திய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.
விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், சுரேஷ் ரெய்னா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |