IND vs SA; இறுதிப்போட்டியில் குறுக்கிட மழை - மழை தொடர்ந்தால் என்ன நடக்கும்?
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான இறுதிப்போட்டியில் மழை தொடர்ந்தால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.
இறுதிப்போட்டியில் குறுக்கிட மழை
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2025 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று 3 மணிக்கு நவி மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் தொடங்க இருந்தது.

நவி மும்பை பகுதியில், போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்ய 65% வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டிருந்தது.
அதன்படியே, மழை பெய்வது வருவதால் 2;30 மணிக்கு நடைபெற வேண்டிய நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மழை தொடர்ந்தால் என்ன நடக்கும்?
இறுதிப்போட்டி என்பதால், ஐசிசி விதிப்படி ரிசர்வ் டே உண்டு. அதாவது போட்டி நாளை நடைபெறும்.
வழக்கமாக இவ்வாறு இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டால், போட்டியை தொடர கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்படும்.

தாமதம் காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டால், முடிவை பெற குறைந்தது இரு அணிகளும் 20 ஓவர்கள் விளையாடியிருக்க வேண்டும்.
2 மணி நேரத்திற்கு மேலாகியும் மழை தொடர்ந்தால், ஓவர்கள் குறைக்கப்படும்.
குறைந்த ஓவர்களுடன் போட்டி இன்று தொடங்கப்பட்டு, மீண்டும் மழை குறுக்கிட்டால், இடைநிறுத்தப்பட்டு, எஞ்சிய ஓவர்களில் இருந்து நாளை போட்டி தொடங்கும்.
நாளையும் போட்டி நடத்தமுடியாமல் மழை குறுக்கிட்டால், உலகக்கோப்பை இரு அணிகளும் பகிர்ந்து வழங்கப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |