ஆளும் கட்சியை பின்னுக்கு தள்ளி சுயேட்சை வேட்பாளர் வெற்றி! பீகாரில் நிதிஷ்குமார் கட்சி தோல்வி
பீகாரின் ரூபாலி தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை பின்னுக்கு தள்ளி சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
சுயேச்சை வேட்பாளர் வெற்றி
இந்தியாவில் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10 -ம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இந்த 13 தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
அந்தவகையில், பீகாரின் ரூபாலி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேதலில் ஆளும் கட்சியான ஜக்கிய ஜனதா கூட்டணி வேட்பாளர் கலாதர் பிரசாத் மண்டல் போட்டியிட்டார்.
அதேபோல ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் பீமா பாரதியும், லோக் ஜன சக்தி சார்பில் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்த சங்கர் சிங்கும் தற்போது சுயேச்சையாக போட்டியிட்டார்.
இந்நிலையில், இன்று வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் 68,070 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ஜக்கிய ஜனதா வேட்பாளர் 59, 824 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார். இந்த இடைத்தேர்தலில் பீகார் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் நிதீஷ் குமார் கட்சி தோல்வியடைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |