எத்தனால் உற்பத்தியில் கரும்புச்சாறு பயன்படுத்தலாம்; தடையை நீக்கிய இந்திய மத்திய அரசு
கரும்புச்சாற்றில் இருந்து எத்தனால் தயாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க இந்திய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
எத்தனால் (ethanol) உற்பத்தியில் கரும்புச்சாறு (sugarcane juice) மற்றும் பி ஹெவி வெல்லத்தை (B-heavy molasses) தொடர்ந்து பயன்படுத்த உணவு அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக, 2023-24ல் Ethanol (green fuel) உற்பத்தியில் எந்த குறையும் இருக்காது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, எத்தனால் உற்பத்தியில் கரும்புச்சாறு மற்றும் சர்க்கரை பாகு ஆகியவற்றை பயன்படுத்த அரசு டிசம்பர் 7ம் திகதி தடை விதித்தது.
தற்போது, உள்நாட்டு சந்தையில் சீனியின் விலை உயர்வு மற்றும் தடையற்ற விநியோகம் ஆகியவற்றின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
India To Allow Use Of Sugarcane Juice For Making Ethanol In 2024, sugarcane juice for making ethanol, sugarcane juice, B-heavy molasses, green fuel ethanol