வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மீண்டும் அனுமதியளித்த இந்தியா: ஒரே ஒரு நிபந்தனை
ஜூலை மாத தடை விதிப்புக்கு பின்னர் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய தற்போது இந்தியா அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அரசு திடீரென்று தடை
பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசாங்கம் திடீரென தடை விதித்துள்ளதால் துறைமுகங்களில் சிக்கியுள்ள சரக்குகளை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது.
Credit: JOTHI RAMALINGAM B
உள்நாட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் பரவலாக நுகரப்படும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை ஜூலை 20ம் திகதி இந்திய அரசு திடீரென்று தடை செய்து வாடிக்கையாளர்களை திகைக்க வைத்தது.
திடீர் தடை காரணமாக ஆயிரக்கணக்கான டன் வெள்ளை அரிசி துறைமுகங்களில் தேங்கின. இதனால் வர்த்தகர்கள் பெரும் இழப்பை எதிர்கொள்ளும் நிலை உருவானது.
இந்த நிலையில் ஜூலை 20ம் திகதி வரையில் ஏற்றுமதி வரி செலுத்திய வர்த்தகர்களின் சரக்குகளை ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பதாக வர்த்தக அமைச்சகத்தின் பிரிவான DGFT அறிவித்துள்ளது.
150,000 டன் வெள்ளை அரிசி
ஜூலை மாதம் வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் வெள்ளை அரிசிக்கு 20 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் DGFT அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் நாட்டின் பல்வேறு துறைமுகங்களில் இருந்து சுமார் 150,000 டன் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி வெளியேற்றப்பட்டுள்ளது.
Credit: Chanss Lagaden/CBC
இருப்பினும் காண்ட்லா துறைமுகத்தில் தற்போதும் மூன்று கப்பல்கள் புறப்படாமல் உள்ளது எனவும், பல்வேறு துறைமுகங்களில் சரக்குகள் தேங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதம் இந்தியாவில் இருந்து முன்னெடுக்கப்படுகிறது. 150 நாடுகளுக்கும் அதிக எண்ணிக்கையில் இந்திய அரிசியை இறக்குமதி செய்கின்றன.
2022ல் மட்டும் 22.2 மில்லியன் டன் அளவுக்கு அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. ஜூலை மாத இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடைகள் உலகளாவிய அரிசி விலையில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது வெளியேறியுள்ள சரக்குகளில் பெரும்பாலும் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கானவை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |