தடையை நீக்கிய இந்தியா... வெளிநாடொன்றில் சரசரவென சரியும் வெங்காய விலை
மூன்று மாத கால தடையை நீக்கி ஐக்கிய அமீரகத்தில் வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதிக்கும் என்றால், தற்போதைய விலையில் இருந்து 20 சதவீதம் வரையில் சரிவடைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா ஏற்றுமதிக்கு தடை
உள்ளூர் சந்தையில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், வெங்காய ஏற்றுமதியில் உலகில் பெரும்பங்காற்றிவரும் இந்தியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
டிசம்பர் 8ம் திகதி முதல் மார்ச் மாத இறுதி வரையில் இந்த ஏற்றுமதி தடை நீடிக்கும் என்றும் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு 64,400 டன் அளவுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி அளித்திருந்தது.
இதில் 14,400 டன் வெங்காயம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு என்று இந்திய தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த நிலையில் கிலோவுக்கு 1.5 திர்ஹாம் முதல் 2 திர்ஹாம் வரையில் விற்பனையில் இருந்த வெங்காயம் 7 முதல் 8 திர்ஹாம் அளவுக்கு அதிகரித்தது.
ஐக்கிய அமீரக சந்தைகளில்
மட்டுமின்றி, இந்தியாவின் தடையை அடுத்து ஐக்கிய அமீரகத்தில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பலர் துருக்கி, ஈரான் மற்றும் சீனாவை நாடினர். இதனால் வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
தற்போது மூன்று மாத கால தடை முடிவடைய இருப்பதால், மீண்டும் இந்திய வெங்காயம் ஐக்கிய அமீரக சந்தைகளில் வரத்தொடங்கும் என்றும், இதனால் விலையில் 20 சதவீதம் வரையில் சரிவு ஏற்படும் என்றும் வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |