பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
#BreakingNews | 'All Pakistani nationals have 48 hours to leave India'
— CNBC-TV18 (@CNBCTV18News) April 23, 2025
The Ministry of External Affairs announced a slew of decisions taken at the Cabinet Committee on Security chaired by PM Narendra Modi at his residence, which included temporary suspension of the Indus Water… pic.twitter.com/hQVQdTULJl
அவற்றில் ஒன்றின்படி, பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்கள்.
பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு
இந்திய அரசு பாகிஸ்தானியர்களின் விசா சேவைகளை ரத்து செய்துள்ளதாகவும், இந்த நடவடிக்கை உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் இன்று அறிவித்துள்ளது.
MEA statement: All Pakistani visas to be cancelled from Sunday (April 27). It was only for Pakistanis on SAARC visas till now.
— Debanish Achom (@debanishachom) April 24, 2025
All Pakistani nationals told to leave India within 72 hours.
Medical visas valid till April 29.
Indian nationals should avoid going to Pakistan,… pic.twitter.com/Vwg5UGWKQx
அத்துடன், இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ஏப்ரல் 27ஆம் திகதியுடன் ரத்து செய்யப்படுவதாகவும், ஆகவே, விசா காலாவதியாகும் முன் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை
பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கியுள்ள அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படும் நடவடிக்கை ஏப்ரல் 27ஆம் திகதி அமுலுக்கு வருவதாகவும், மருத்துவ விசாக்கள் ஏப்ரல் 29ஆம் திகதி வரை மட்டுமே செல்லும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானிலிருக்கும் இந்தியர்கள் முடிந்தவரை விரைவாக இந்தியா திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில், 26 பேர், பெரும்பாலும் சுற்றுலாப்பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |