U19 உலகக் கிண்ண முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி
அமெரிக்க அணிக்கு எதிரான U19 உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் அமெரிக்கா
புலவாயோவில் நடந்த U19 உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின.
X/ICC
முதலில் ஆடிய அமெரிக்க அணி 35.2 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு சுருண்டது. நிதிஷ் 36 ஓட்டங்கள் எடுத்தார்.
ஹெனில் பட்டேல் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் இந்திய அணி களமிறங்கி ஆட மழை குறுக்கிட்டது.
DLS முறைப்படி
இதனால் DLS முறைப்படி, 37 ஓவர்களில் 96 ஓட்டங்கள் வெற்றி இலக்காக மாற்றியமைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 99 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபிக்யான் குண்டு (Abhigyan Kundu) 42 ஓட்டங்கள் விளாசினார்.
அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் ஹெனில் பட்டேல் (Henil Patel) ஆட்டநாயகன் விருது பெற்றார்.
Cricbuzz/X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |