உக்ரைன் போரில் இந்தியாவின் பங்கு... கவலை தெரிவிக்கும் ஐரோப்பிய, அமெரிக்க அதிகாரிகள்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்த முடியாமல் போவதன் பின்னணியில் இந்தியாவின் பங்கிருப்பதாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது பெரிய நாடாக இந்தியா
சர்வதேச அளவில் கட்டுப்படுத்தப்பட்ட முக்கியமான தொழில்நுட்பங்களை ரஷ்யா வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என ஐரோப்பிய, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவே உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தடுத்து நிறுத்தும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் 60 மில்லியன் டொலர் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட முக்கியமான தொழில்நுட்பங்களை ரஷ்யாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
இது இந்த ஆண்டில் முந்தைய மாதங்களை விட இருமடங்கு என்றும் கண்டறிந்துள்ளனர். மேலும், ஜூலை மாதத்தில் 95 மில்லியன் டொலர் அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
இப்படியான தொழில்நுட்பங்களை ரஷ்யாவுக்கு வழங்கி வரும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்து இந்தியா முன்னணியில் இருப்பதாகவும் ஐரோப்பிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது
இந்த விவகாரம் உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகளை ஆத்திரம் கொள்ள வைத்துள்ளதுடன், இது தொடர்பில் இந்தியா தரப்பில் இருந்து முறையான விளக்கமும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மட்டுமின்றி, இந்த விவகாரம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சகமும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. மேலும், ரஷ்யாவின் இராணுவ-தொழில்துறை வளாகத்திற்குள் செல்லும் மிக முக்கியமான தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதும் சமீபத்திய தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக முன்னெடுக்கப்படும் போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்த அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இதுவரை திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |