ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா
உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு தொடர்பிருப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றஞ்சாட்டுவதன் பகீர் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில்
ரஷ்யாவில் இருந்து மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்குவதாக குறிப்பிட்டு, இந்தியா மீது 25 சதவீத வரிகளை விதித்துள்ளது ட்ரம்ப் நிர்வாகம்.
ஏற்கனவே பரஸ்பர வரி என 25 சதவீதம் அமுலில் இருக்கும் நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் தொடர்பில் மேலும் 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரியால் இந்தியா பொருளாதார ரீதியாக நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில் முரண்பாடு என்னவென்றால், ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன், தற்போது தனது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவிலிருந்து வரும் எரிபொருள் விநியோகத்தையே நம்பியுள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், 2025 ஜூலை மாதம் மட்டும் உக்ரைனின் மொத்த எரிபொருள் தேவையில் 15.5 சதவீதத்தை இந்தியாவில் இருந்தே அந்த நாடு இறக்குமதி செய்துள்ளது. அதாவது நாளுக்கு 2,700 டன் டீசல் உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, ஜூலை மாதம் இந்தியாவின் வலுவான ஏற்றுமதி மாதங்களில் ஒன்றாகவும் மாற்றியுள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் டீசல் டானூப் நதி வழியாக ருமேனியா கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து துருக்கியின் ஓபெட் முனையம் வழியாக உக்ரைனுக்கு செல்கிறது.
உக்ரைனுக்கு ஏற்றுமதி
ஜூலை மாதத்தில் இந்தியா மட்டுமின்றி, ஸ்லோவாக்கியா (15%), கிரீஸ் (13.5%), துருக்கி (12.4%), மற்றும் லிதுவேனியா (11.4%) ஆகிய நாடுகளும் உக்ரைனுக்கு டீசல் ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து மட்டும் உக்ரைன் அதிகமாக இறக்குமதி செய்துள்ளது.
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவில் இருந்து மட்டுமே இந்தியா பெருமளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. அதை இந்தியாவின் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சுத்தீகரிப்பு அலைகளில் பெட்ரோல், டீசல் என மாற்றப்பட்டு, கொள்ளை விலைக்கு இந்தியாவில் விற்கப்படுகிறது.
மட்டுமின்றி, இதில் சர்வதேச சந்தை விலைக்கு டீசலை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதனால் இந்தியா மட்டுமின்றி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர்.
உக்ரைன் போருக்கு என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து பொருளாதார உதவிகள் பெறும் உக்ரைன், இந்தியாவில் இருந்து டீசல் இறக்குமதி செய்வதால், அந்தப் பொருளாதார உதவிகள் இந்தியா ஊடாக ரஷ்யாவிற்கே செல்வதாக உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா மீது கடுமை காட்டுவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |