இந்தியா-சீனா நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்
இந்தியா மற்றும் சீனா இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
2020-ல் கொரோனா மற்றும் 2020-2021-ல் கல்வான் மோதலுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட இந்தியா மற்றும் சீனா நேரடி விமான சேவைகள், 2025 அக்டோபர் 26 முதல் மீண்டும் தொடங்கப்பவுள்ளன.
இந்த முடிவை இந்திய வெளிவிவகாரத்துறை மற்றும் சீனாவின் சிவில் விமான அதிகாரிகள் இணைந்து எடுத்துள்ளனர். இது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் சீராகும் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.
IndiGo நிறுவனம், கொல்கத்தா மற்றும் குவாங்சோ இடையே தினசரி நேரடி விமான சேவையை அக்டோபர் 26 முதல் தொடங்கும் என அறிவித்துள்ளது.
பின்னர் டெல்லி மற்றும் குவாங்சோ இடையிலும் நேரடி விமானம் அறிமுகமாகும்.
இந்த சேவைகள் Airbus A320neo விமானங்களால் இயக்கப்படும். இது வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்கள் இடையேயான தொடர்புகளை மேம்படுத்த உதவும்.
இந்த தீர்மானம், சீன வெளிவிவகாரத்துறை அமைச்சர் வாங் யி கடந்த மாதம் இந்தியா வந்ததையடுத்து எடுக்கப்பட்டது.
2024-இல் LAC பகுதியில் இரு நாடுகளும் இடைவெளி குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதனைத் தொடர்ந்து, இரு தரப்பும் பல்வேறு நம்பிக்கைக் கட்டுமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நேரடி விமான சேவைகள், இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர உறவுகளை மீண்டும் நிலைநிறுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. வர்த்தக தடைகள் குறைப்பு, இராணுவ மற்றும் தூதரக அளவிலான உரையாடல்கள் ஆகியவை இந்த புதிய கட்டத்தை உருவாக்கியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |