வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்: புஜாரா நீக்கம்
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்
சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்திய அணி படுதோல்வியை தழுவியது.
இந்நிலையில், வரும் ஜூலை 12ம் தேதி 2 டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது, இத்தொடருக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.
நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்விக்கு ரோஹித் சர்மா தான் காரணம்.
இதனையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பலர் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களை தெரிவித்து வந்த நிலையில், நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ரோகித் சர்மாவைத்தான் கேப்டனாக பிசிசிஐ தேர்வு குழு அறிவித்துள்ளது.
புஜாரா அதிரடி நீக்கம்
துணை கேப்டனாக ரஹானே அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொடரில் சுப்மன் கில், சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, ஜெய்ஸ்வால், கே எஸ் பரத், இசான் கிஷன், அஸ்வின், ஜடேஜா, அக்சர்பட்டேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனாட்கட், நவதீப் ஷைனி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், முகமது சமி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. மேலும், இப்போட்டியில் புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |