திவாலாகும் நிலையிலும் மாலத்தீவிற்கு நிதியுதவி அளிக்க முன்வந்த அண்டை நாடு
ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருக்கும் அண்டை நாடான பாகிஸ்தான், மாலத்தீவிற்கு உதவுவதாக அறிவித்துள்ளது.
மாலத்தீவுடனான பிரச்சனை காரணமாக அந்த நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியுதவியை இந்தியா குறைத்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.600 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்டை நாடான பாகிஸ்தான் மாலத்தீவுக்கு ஆதரவாக நிற்கிறது. மாலத்தீவின் வளர்ச்சிக்கு உதவ பாகிஸ்தான் அரசு முன் வந்துள்ளது.
பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வர்-உல் ஹக் கக்கர் (Anwaar-ul Haq Kakar) வியாழக்கிழமை மாலத்தீவு ஜனாதிபதி முய்சுவுடன் (Mohamed Muizzu) தொலைபேசியில் பேசினார்.
இதன்போது மாலதீவின் வளர்ச்சிக்கு தேவையான நிதி உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தனர்.
மேலும், சுற்றுச்சூழல் மாற்றங்களின் சவால்களை எதிர்கொள்ள நாட்டிற்கு உதவுவேன் என்றார்.
ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், தற்போது மாலத்தீவுக்கு உதவ முன்வருவது சுவாரஸ்யம்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், சமீபத்தில் சீனாவிடம் 2 பில்லியன் டொலர் கடனாகக் கேட்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நேரத்தில் பாகிஸ்தானின் இந்த முடிவால் சில நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன.
திவால் விளிம்பில் இருக்கும் பாகிஸ்தான், மாலத்தீவுக்கு நிதி உதவி அறிவிப்பது குறித்து விவாதித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
India Pakistan Maldives, Pakistan pledges support to Maldives, Pakistan Maldives Relationship