இன்சூரன்ஸ், கார்களுக்கு GST-யை குறைக்க இந்திய அரசு திட்டம்
இந்திய அரசு சிறிய கார்கள் மற்றும் இன்சூரன்ஸ் பிரிமியங்களுக்கான வரிகளை குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இது 2027-க்கு பிறகு நடைபெறும் மிகப் பாரிய GST மறுசீரமைப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது.
சிறிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் மீது விதிக்கப்படும் 28 சதவீத GST-ஐ 18 சதவீதமாக குறைக்க அரசு பரிந்துரைந்துள்ளது.
இதன் மூலம், Maruti Suzuki, Hyundai போன்ற சிறிய கார் நிறுவனங்களுக்கு பெரும் நன்மையாக அமையும்.
மேலும், health and life insurance பிரிமியங்களுக்கு விதிக்கப்படும் 18 சதவீதம் GST-ஐ 5 சதவீதமாக அல்லது 0 சதவீதமாக குறைக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால், மாருதி சுசூகி, Hero Motocorp, Bajaj Auto போன்ற நிறுவனங்களின் பங்குகள் 2 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
அதேபோல், காப்பீட்டு நிறுவனங்களான ICICI Prudential, SBI Life, LIC ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் 2 முதல் 5 சதவீதம் உயர்ந்துள்ளன.
இந்த வரி குறைப்பு, மோடி அரசின் வரி மறுசீரமைப்பு திட்டத்தின் பகுதியாகும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும், இந்திய தயாரிப்புகளின் போட்டித்திறனை அதிகரிக்கும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
GST reform India 2025, small car tax cut India, Modi GST changes, insurance GST reduction, Maruti Suzuki share price, Hyundai Tata GST benefit, LIC SBI ICICI GST impact