கடலோர காவல்படைக்கு 6 ரோந்து கப்பல்கள்.., ரூ.1,614 கோடியில் இந்தியா ஒப்பந்தம்
இந்திய கடலோர காவல்படைக்க 6 ரோந்து கப்பல்களை கொள்முதல் செய்ய ரூ.1,614.89 கோடிக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஒப்பந்தம்
இந்திய கடலோர காவல்படைக்கு ஆறு அடுத்த தலைமுறை கடல் ரோந்து கப்பல்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் மும்பையில் உள்ள மசாகான் டாக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் (Mazagon Dockyard Shipbuilders) நேற்று ஒப்பந்தம் மேற்கொண்டது.
மொத்தம் ரூ.1614.89 கோடி மதிப்பில் இந்த கப்பல்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
என்ன பயன்கள்?
இந்த நவீன மற்றும் உயர் தொழில்நுட்ப கப்பல்கள் கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு, இந்திய கடலோர காவல்படையின் மனிதாபிமான உதவி உள்ளிட்ட பிற முக்கிய திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இவை, மும்பை எம்.டி.எல் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு 66 மாதங்களில் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிப்பது, கடல்சார் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது, துணைத் தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கான தற்சார்பு இந்தியா நோக்கங்களை அடைய இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |