அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ஆகஸ்டில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கிய எண்ணெய் எவ்வளவு தெரியுமா?
அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கிட்டத்தட்ட 3 பில்லியன் யூரோ மதிப்பிலான கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது.
2025 ஆகஸ்ட் மாதத்தில், ரூ.26,000 (2.9 பில்லியன் யூரோ) மதிப்பிலான ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.
இது கிட்டத்தட்ட சீனாவின் 3.1 பில்லியன் யூரோ இறக்குமதிக்கு சமமாக உள்ளது.
ஹெல்ஸின்கியில் உள்ள Centre for Research on Energy and Clean Air வெளியிட்ட தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் இந்தியா 2.7 பில்லியன் யூரோ அளவில் கச்சா எண்ணெய் வாங்கியிருந்தது. அதேநேரத்தில் சீனாவின் இறக்குமதி 4.1 பில்லியன் யூரோவிலிருந்து குறைந்துள்ளது.
இந்தியாவின் ரஷ்யா சார்ந்த மொத்த எரிபொருள் இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் 3.6 பில்லியன் யூரோவாக இருந்தது.
இதில், கச்சா எண்ணெய் 2.9 பில்லியன் யூரோ, நிலக்கரி 510 மில்லியன் யூரோ மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தயாரிப்புகள் 282 மில்லியன் யூரோ ஆகும்.

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து
உக்ரைன் போருக்கு ரஷ்யாவிற்கு நிதியளிக்கும் வகையில் எண்ணெய் வாங்குவதாக, இந்தியா மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
அதுமட்டுமின்றி, இந்தியா மற்றும் சீனா மீது 100 சதவீதம் வரி விதித்து அழுத்தம் கொடுக்கவேண்டும் என ஐரோப்பிய இன்றியத்திடம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சூழலில், இந்தியா தனது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் ரஷ்யாவுடன் வணிக உறவுகளை தொடரும் நிலைப்பாட்டில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |