கடற்படைக்கு P8I விமானங்கள் தேவை - அமெரிக்கா விலை குறைக்கவேண்டுமென இந்தியா நிலைப்பாடு
இந்தியா-அமெரிக்கா இடையிலான வணிக வரி மோதலுக்கு மத்தியில், P8I கண்காணிப்பு விமானங்களின் விலையை குறைக்க அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.
இந்திய கடற்படைக்கு தேவையான 6 P8I (Poseidon) கண்காணிப்பு விமானங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்குகிறது.
அனால் இதன் மொத்த விலைமதிப்பு 3 பில்லியன் டொலருக்கு அதிகமாக உள்ளது. இது முன்பு கொள்முதல் செய்யப்பட்ட விலையில் இருந்து 50 சதவீதம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், விலை அதிகமாக இருப்பதால் அதனை குறைக்கவேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது.
கடற்படைக்காக இந்த விமானங்கள் நிச்சயமாக தேவை, ஆனால் விலை குறைக்கப்படவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.
விலை உயர்வுக்கு, விநியோக சங்கிலி சிக்கல்களை அமெரிக்கா காரணமாக கூறுகிறது. ஆனால், இந்திய அதிகரைகள் இதனை மிக அதிகமான விலை என கருதுகின்றனர்.
இதுகுறித்து, அடுத்த மாதம் இந்தியா-அமெரிக்கா இடையே கடுமையான பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புள்ளது.
இந்திய கடற்படையில் ஏற்கெனவே 12 P8I விமானங்கள் உள்ளன. அவை கடல்சார் கண்காணிப்பு, பேரிடர் மீட்புப்பணி மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை எதிர்க்கும் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
P8I விமானம் இடைவிடாமல் 2000 கி.மீ. வரை பயணிக்கும் திறன் கொண்டது என்பது அதன் கூடுதல் சிறப்பு அம்சமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |