இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை பாகிஸ்தான் கொண்டுசெல்ல..அனுமதி மறுத்த இந்தியா?
புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை கொண்டுசெல்ல, பாகிஸ்தானுக்கு வான்பரப்பை பயன்படுத்த அனுமதி தரவில்லை என்ற செய்தியை இந்தியா மறுத்துள்ளது.
பேரிடர் நிவாரண உதவி
இலங்கையில் டிட்வா புயலின் தாக்கத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
இதுவரை 330க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படும் நிலையில், இந்தியா மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகிறது.
அதேபோல் பாகிஸ்தானும் விமானம் மூலம் நிவாரணப் பொருட்களை கொண்டுசெல்ல முன்வந்துள்ளது.
ஆனால், அந்நாட்டு ஊடகங்களில் இந்தியா தனது வான் பரப்பை பயன்படுத்த அனுமதி என்று செய்தி வெளியானது.
இந்த நிலையில், புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பாகிஸ்தான் நிவாரணப் பொருட்களை கொண்டுசெல்ல, இந்தியா உடனடியாக அனுமதி வழங்கியதாக தெரிவித்துள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |