பிரித்தானியவை தொடர்ந்து ரஷ்யாவுடன் இந்தியா கையெழுத்திடவுள்ள FTA ஒப்பந்தம்
ரஷ்யா தலைமையிலான 5 நாடுகள் கொண்ட அமைப்புடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தியாவும் யுரேஷிய பொருளாதார ஒன்றியமும் (EAEU) சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்க, ஒப்பந்தத்தின் அடிப்படை விதிகளுக்கு மாஸ்கோவில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த EAEU வர்த்தக கூட்டமைப்பில் ரஷ்யா, பெலாரஸ், ஆர்மீனியா, கஜகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த நடவடிக்கை, அமெரிக்காவுடன் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வரி மோதலைத் தொடர்ந்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிலிருந்து கச்ச எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவீதம் கூடுதல் வரியுடன் சேர்த்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
EAEU உடனான இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவிற்கு புதிய சந்தைகளில் நுழைவதற்கும், ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், MSME நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், இந்திய பொருளாதாரத்தின் போட்டி திறனை உயர்த்துவதற்கும் உதவியக்கா இருக்கும்.
2024-ல் இந்தியா-EAEU இடையே 69 பில்லியன் டொலர் அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது. இது 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும், புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகும் மற்றும் EAEU உறுப்பினர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்பும் விரைவில் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதாக உறுதியளித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India EAEU FTA, India Eurasian Economic Union FTA, India Russia trade agreement, Eurasian Economic Union deal, India free trade talks 2025, India FTA negotiations, India trade bloc agreement, India Russia economic partnership, India global trade strategy