இந்தியா இனி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடாது - பிசிசிஐ துணைத் தலைவர் உறுதி
காஷ்மீர்-பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, இந்தியா இனி பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காது என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 22-ஆம் திகதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, பல முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கான பதிலாக, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா, Sports Tak-ல் கொடுத்த பேட்டியில், “நாம் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கிறோம். இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். இந்திய அரசு எதை முடிவெடுக்கிறதோ அதனை பிசிசிஐ பின்பற்றும். அதனால்தான் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடரில் விளையாடுவதில்லை. இந்நிலை தொடரும்” என உறுதியாக தெரிவித்தார்.
தற்போது இந்தியா பாகிஸ்தானுடன் ICC போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு இருதரப்பு தொடர் நடத்தப்பட்டதையே கடைசி முறையாகும். 2025 Champions Trophy போட்டிக்காகவும் இந்தியா பாகிஸ்தான் செல்லவில்லை.
ICC வட்டாரத்திலும் தற்போது இது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரம் இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் உறவுகளில் ஒரு புதிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India vs Pakistan cricket, India Pakistan bilateral series, BCCI Pakistan decision, Rajeev Shukla on Pakistan, Pahalgam attack impact on cricket, No cricket ties with Pakistan, India Pakistan ICC matches, India bans bilateral cricket with Pakistan, BCCI government stance, India Pakistan sports relations