இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு
இந்திய விமானப்படைக்கு வலிமை சேர்க்க புதிய ரக போர் விமானத்தை தயாரிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் (IAF) ஸ்டெல்த் போர் விமான தேவையை பூர்த்தி செய்ய, அமெரிக்காவின் F-35A மற்றும் ரஷ்யாவின் Su-57E ஆகியவற்றை இந்தியா நிராகரிக்கலாம் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குப் பதிலாக, இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து ஆரம்பித்திருந்த FGFA (Fifth Generation Fighter Aircraft) திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது.
ஏன் F-35, Su-57ஐ இந்தியா தவிர்க்கிறது?
F-35A-ஐ வாங்குவதால் அமெரிக்கா, இந்தியாவை தனது S-400 வான் பாதுகாப்பது அமைப்பை கை விடும் வகையில் THAAD வாங்க வற்புறுத்தும் வாய்ப்பு உள்ளது. இது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை.
Su-57E-ல் ஒற்றை இருக்கை மட்டுமே. எனவே, இது இந்திய விமானப்படைக்கு போதுமானதாக இருக்காது. இந்தியாவுக்கு இரட்டை இருக்கை, இரட்டை இன்ஜின் கொண்ட stealth jet தேவைப்படுகிறது. அதனால்தான் IAF 2018-ல் FGFA திட்டத்தில் இருந்து விலகியது.
ஆனால் இப்போது சூழ்நிலை மாறியுள்ளது
Su-57 இல் இரண்டாவது தலைமுறை "Izdeliye 30" இன்ஜின் ஏற்கனவே சோதனையில் உள்ளது. இது supercruise திறனை வழங்கும்.
2023-ல் ரஷ்யா "dual-seat Su-57" என புதிய பதிப்புக்கு காப்புரிமை பெற்றுள்ளது. இந்த 2-seat வேரியண்ட், இந்தியாவுக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம்.

அமெரிக்காவிலிருந்து ஈத்தேன் இறக்குமதி செய்யும் முகேஷ் அம்பானி - ட்ரம்ப் மகிழ்ச்சி, சீனாவிற்கு பாதிப்பு
- Pilot மற்றும் Weapons Officer என தனித்தனி பணிகளை செய்யலாம்
- ட்ரோன்களை இயக்கும் mothership வாய்ப்பு
- Command & Control Hub-ஆக செயல்படும்
- Deep strike தாக்குதல்களுக்கு ஏற்றது
- இந்திய விமானப்படைக்கு பழக்கமான twin-seat ops நுட்பம்
இடைக்கால தீர்வாக 18–24 விமானங்களை வாங்க வாய்ப்பு
AMCA 5th Gen fighter 2035க்கு முன் வருவதற்கான சாத்தியமே இல்லை. IAF-ன் MRFA (114 jets) திட்டமும் தாமதமாகவே உள்ளது. அதனால், twin-seat Su-57s விமானங்களை 18 அல்லது 24 அளவில் வாங்கி, இந்திய விமானப்படையின் உடனடி ஸ்டெல்த் வலுவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டம் Make in India வலையில் ரஷ்யாவுடன் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உற்பத்தி ஒப்பந்தங்களாகவும் உருவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |