ரூ.1 லட்சம் கோடிக்கு நீர்முழ்கி கப்பல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா திட்டம்
ரூ.1 லட்சம் கோடிக்கு நீர்முழ்கி கப்பல்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் ஆழ்கடல் பாதுகாப்பி திறனை அதிகரிக்கும் வகையில், ரூ. 1 லட்சம் கோடிக்கு மேற்பட்ட 2 நீர்முழ்கி கப்பல் ஒப்பந்தங்களை 2026 நடுப்பகுதிக்குள் இறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவின் கடற்படை தாக்கம் அதிகரிக்கின்ற சூழலில் இந்த முயற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முதல் திட்டம்
- மூன்று Scorpene-class நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் திட்டம்
- இந்தியாவின் Mazagon Dock Limited நிறுவனம் மற்றும் பிரான்சின் Naval Group நிறுவனம் இணைந்து உருவாக்கவுள்ளனர்.
- ரூ.36,000 கோடி மதிப்புள்ள இந்த திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்பு அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- ஆனால் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக விவரங்களை இறுதி செய்வதில் தைமாதம் ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் திட்டம்
- ஆறு டீசல்-மின்சார ஸ்டெல்த் நீர்முழ்கி கப்பல்களை வாங்கும் திட்டம்
- இதன் மதிப்பு சுமார் ரூ.65,000 கோடி
- 2021-ல் ஒப்புதல் பெற்ற இந்த திட்டம் Make In India முயற்சியின் ஒரு பாரிய பகுதியாக கருதப்படுகிறது.
- இத்திட்டத்திற்காக Mazagon Dock Shipbuilders Ltd நிறுவனம் ஜேர்மனியின் ThyssenKrupp Marine Systems நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
India submarine deal 2026, Rs 1 lakh crore defence contract, Scorpene-class submarine India, Diesel-electric stealth submarines, Mazagon Dock Naval Group, ThyssenKrupp Marine Systems India, Make in India defence projects, Indian Navy undersea capabilities, China naval threat India response, Defence ministry submarine approval
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        