இஸ்ரேலில் தங்கியுள்ள இந்தியர்களுக்கு இந்திய அரசு வழங்கிய அறிவுரை
இஸ்ரேலில் தங்கியுள்ள இந்தியர்களுக்கு இந்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஐந்து மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரை நிறுத்துவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
இதனிடையே, இஸ்ரேல் - லெபனான் எல்லையில் நடந்த ஏவுகணை தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்த செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய அரசு ஓர் அறிவுரையை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலில் தங்கியுள்ள இந்திய குடிமக்கள், குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1000 கோடீஸ்வர விருந்தினர்கள்., 2500 வகை உணவுகள்., உணவுக்கு மட்டும் பல கோடிகள் செலவழித்த அம்பானி குடும்பம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Israel hamas War, Indians in Israel, Indian Government issues advisory indian nationals in Israel