இனி 10 ஆண்டுகளுக்கு செலவு குறைவு.., சீனாவுக்கு போட்டியாக இந்தியா போட்ட ஒப்பந்தம் தெரியுமா?
சீனாவுக்கு போட்டியாக ஈரானின் சபாகர் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு இந்தியா குத்தகைக்கு பெற்றிருக்கிறது.
'ஒரே பாதை, ஒரேமண்டலம்' திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் குவாதர் நகரில் இருக்கும் துறைமுகத்தை சீன அரசு நிர்வகித்து வருவதன் மூலம், வளைகுடா நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளுடனான கடல் வழி சரக்கு போக்குவரத்து சீனாவிற்கு அதிகரித்து வருகிறது.
இந்தியா -ஈரான் ஒப்பந்தம்
இந்நிலையில், சீனாவுக்கு போட்டியாக ஈரானின் சபாகர் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு இந்தியா குத்தகைக்கு பெற்றிருக்கிறது. இந்த துறைமுகமானது குவாதர் துறைமுகத்தில் இருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ளது.
இது தொடர்பாக கடந்த 2003 -ம் ஆண்டில் அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயும், அப்போதைய ஈரான் அதிபர் கடாமியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு, கடந்த 2016- ம் ஆண்டில் சபாகர் துறைமுக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் திகதி முதல் சபாகர் துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் இந்தியா நிர்வகித்து வருகிறது. இது, ஓராண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பாகரில் உள்ளசாகித் முகமது பெஹஷ்டி துறைமுகத்தை 10 ஆண்டுகள் குத்தகைக்கு இந்தியா பெற்றிருக்கிறது.
இருநாடுகளுக்கு இடையே நடந்த ஒப்பந்தமானது இந்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் முன்னிலையில் கையெழுத்தானது.
Bank locker -ல் ரூ.3 கோடி இருந்தும் No use! தந்தை இறந்து 12 ஆண்டுகள் கழித்து பார்த்த மகன்களுக்கு அதிர்ச்சி
செலவு குறைவு
இது தொடர்பாக இந்திய அரசு வட்டாரங்கள் தரப்பில், "இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக மத்திய ஆசிய நாடுகளுக்கு சாலை மார்க்கமாக சரக்குகளை அனுப்ப முடியும்.
இந்த துறைமுகத்தால் 30 சதவீதம் அளவுக்கு போக்குவரத்து செலவு குறைகிறது" என்றும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |