Bank locker -ல் ரூ.3 கோடி இருந்தும் No use! தந்தை இறந்து 12 ஆண்டுகள் கழித்து பார்த்த மகன்களுக்கு அதிர்ச்சி
தந்தை இறந்து 12 ஆண்டுகள் கழித்து வங்கி லாக்கரை மகன்கள் திறந்து பார்த்த போது ரூ.3 கோடியில் பழைய ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது.
எதிர்பாராத விதமாக பெற்றோர் இறந்து விடும் நேரத்தில் தங்களது சொத்துக்கள் குறித்த விவரங்களை பிள்ளைகளிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் இருப்பது பிற்காலத்தில் சொத்துக்கள் பிள்ளைகளுக்கு சென்றடையாமல் இருக்கிறது. அந்த மாதிரி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.
Bank locker -ல் ரூ.3 கோடி
கோவாவின் பர்தேஷ் தாலுகாவில் இருக்கும் மப்ஷா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜார்ஜ். இவருடைய மகன்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்.
மகன்களும் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் மறைந்த ஜார்ஜின் வீடு பூட்டியே கிடந்துள்ளது.
இந்நிலையில், 12 ஆண்டுகள் கழித்து தந்தையின் சொத்துக்களை விற்பனை செய்வதற்காக மகன்கள் வெளிநாட்டில் இருந்து கோவாவிற்கு வந்தனர்.
அப்போது, தனது தந்தை வாழ்ந்த வீட்டை திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தனர். அவர்கள், வங்கி லாக்கர் சாவிகளும், சில ஆவணங்களும் இருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர், சம்மந்தப்பட்ட வங்கிக்கு சென்று நடைமுறைகளை முடித்து மூன்று லாக்கரை திறந்து பார்த்த போது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கட்டுக்கட்டாக ரூ.3 கோடி மதிப்பில் பணம் இருந்துள்ளது.
ஆனால், அவை அனைத்தும் காலாவதியான பழைய ரூபாய் நோட்டுகள் ஆகும். அதாவது, அந்த நோட்டுகள் அனைத்தும் இந்திய அரசால் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டதால் மகன்களுக்கு அந்த பணம் பயன்படாது.
மேலும், சில லட்சம் மதிப்பில் இருந்த நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டனர். தற்போது, ஜார்ஜ் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் எதுவும் மகன்களுக்கு பயன்பட முடியாமல் போனது.
மேலும், தனது தந்தை இவ்வளவு பணத்தை சேமித்து வைத்திருப்பதே எங்களுக்கு தெரியாது என்று மகன்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |