வரியாக ரூ.2 லட்சம் கோடி கொடுத்தும் ஒரு பைசா கூட இந்திய அரசு தரவில்லை: டெல்லி அமைச்சர் ஆவேசம்
வரி வழியாக இந்திய அரசுக்கு ரூ.2 லட்சம் கோடியை டெல்லி மாநிலம் வழங்கிய நிலையில் ஒரு பைசா கூட தரவில்லை என்று அம்மாநில அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
வருமான வரி மற்றும் GST மூலம் பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்திய அரசு வரி வசூல் செய்தபோதிலும் மாநிலங்களுக்கு ஒதுக்கும் வரி பகிர்வு மிகவும் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு, கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
அந்தவரிசையில் டெல்லி மாநில அரசு இந்திய அரசை குற்றம் சாட்டியுள்ளது. வரி வசூல் தொடர்பாக அம்மாநில அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிஷி கூறியது
இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், "மத்திய ஜிஎஸ்டி (Central GST) மூலம் டெல்லி மாநிலம் ரூ.25 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. அதோடு, வருமான வரி மூலம் ரூ.2 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது.
ஆனால், டெல்லி மாநிலத்தின் கட்டமைப்பிற்காக ரூ.10 ஆயிரம் கோடி இந்திய அரசிடம் கேட்கிறது. ஆனால், கடந்த ஆண்டு ஒரு பைசா கூட மத்தய அரசு தரவில்லை.
2001 -ம் ஆண்டில் இருந்து டெல்லி மாநிலத்திற்கு ரூ.325 கோடி மட்டுமே மத்திய வரிகளில் இருந்து வழங்கி வந்தது. அந்த தொகையும் கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |