மனிதர்கள் பயணிக்கும் முதல் டிரோன்...இந்தியாவில் விரைவில் அறிமுகம்!
இந்தியாவில் முதல்முறையாக மனிதர்கள் பயணிக்கும் டிரோன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது உருவாகி வரும் விஞ்ஞான தொழிநுட்ப காலத்தில் ஸ்மார்போன் எவ்வளவு இன்றியமையாததாக மாறிவிட்டதோ, அதைப்போல வரும் காலங்களில் ஏர் ஆம்புலன்ஸ் சேவைகள், மருந்துகள் டெலிவரி போன்ற பல்வேறு சேவைகளுக்கு டிரோன்களின் பயன்பாடு இன்றியமையாதாக மாறிவருகிறது.
சமீபத்தில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் டிரோன்கள் மூலம் பார்சல்களை டெலிவரி செய்யும் முயற்சியை இந்தியத் தபால் துறை மேற்கொண்டது.
இந்தநிலையில் புனேவில் உள்ள சாகர் டிஃபென்ஸ் இன்ஜினீயரிங் என்ற நிறுவனம் ஒருவர் மட்டும் பயணிக்கக்கூடிய பயணிகள் டிரோன்களை முதல்முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான சோதனை ஓட்டம் இந்திய பிரதமர் மோடி முன்னிலையில் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி இனி வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும், ஒவ்வொரு பண்ணையிலும் டிரோன்கள் இருக்க வேண்டும், ஒவ்வொரு வீடும் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதே கனவு என்று தெரிவித்து இருந்தார்.
மனிதர்கள் பயணிக்கும் இந்த டிரோன்கள் ரிமோட் மூலம் இயங்க கூடியது, சுமார் 25 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்ட இந்த டிரோன், சுமார் 130 கிலோ வரை எடையைத் தாங்கும் திறன் கொண்டது.
அதுமட்டுமில்லாமல் பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், டிரோனில் பயணிக்கும் போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலும் பாதுகாப்பாகத் தரையிறங்கும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் பாலஸ்தீனம்...24க்கும் மேற்பட்டோர் பலி: வீடியோ காட்சிகள்!
மேலும் அவசர காலங்களில் பாரசூட் திறந்து பாதுகாப்பாக தரையிறங்க உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.