தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் பாலஸ்தீனம்...24க்கும் மேற்பட்டோர் பலி: வீடியோ காட்சிகள்!
பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவிற்கு எதிராக சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அந்தவகையில் காசா பகுதியில் உள்ள கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஜிஹாத் போராளிக் குழுவின் தளபதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, பாலஸ்தீனிய ஜிஹாத் போராளிகள் இஸ்ரேலிய நகரங்கள் மீது குறைந்தது 160க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
The #Palestinian resistance launched about 100 missiles targeting #Zionist colonies enclaving #Gaza, Asqalan, #TelAviv, Beit Yam and other colonies in the middle section of occupied historic #Palestine. Again, their Iron Dome failed to stop the majority of these missiles. pic.twitter.com/8NouCq0gTt
— tim anderson (@timand2037) August 5, 2022
இந்தநிலையில் இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடத்தி வரும் வான்வழி தாக்குதலில் 24 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
அத்துடன் கடற்கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 குழந்தைகள், 23 வயது பெண் மற்றும் பாலஸ்தீன ஆயுதக் குழுவின் தளபதி உட்பட 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 125 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
????Israel continues to strike in Palestine: a house belonging to a Palestinian Shamlakh family in Sheikh Ajlin, west of Gaza City, was hit by a rocket attack. pic.twitter.com/G7IaYKVE2w
— ТРУХА⚡️English (@TpyxaNews) August 6, 2022
கூடுதல் செய்திகளுக்கு: புதிய கட்டத்திற்கு நுழையும் உக்ரைன் போர்: பிரித்தானிய உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!
ஆனால் பாலஸ்தீன ஜிஹாத் குழுவின் ராக்கெட் ஏவுகணை தாக்குதலில் தான் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியதாக AP செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.