ஆயுர்வேத சிகிச்சைக்கு இந்தியா வருபவர்களுக்கு விசேட விசா!
ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியா வர விரும்புவோருக்கு மத்திய அரசு நற்செய்தி தெரிவித்துள்ளது.
ஆயுர்வேத சிகிச்சைக்காக நாட்டிற்கு வருபவர்களுக்கு விசேட விசா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, விசாக்களின் பல்வேறு பிரிவுகளில் 'ஆயுஷ் விசா' என்ற புதிய வகை சேர்க்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறும் வெளிநாட்டினருக்கு மட்டுமே ஆயுஷ் விசா வழங்கப்படுகிறது.
ஆயுர்வேதம், யோகா, மற்ற பாரம்பரிய சிகிச்சை முறைகள், பாரம்பரிய மருத்துவம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் இந்தியாவுக்கு வர ஆயுஷ் விசாவின் சேவையைப் பெறலாம்.
இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் ஆயுஷ் விசா முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிறைய லாபம் ஈட்ட முடியும்.
அரபு, ஐரோப்பிய, ரஷ்ய, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளாவுக்கு வருகின்றனர். புதிய ஆயுஷ் விசா அமலுக்கு வருவதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Ayush Visa, india Ayurvedic treatment, Ayurvedic medical treatment in India, Medical Value Travel, India Tourism, Travel To India, Kerala Ayurvedic Treatment, ayush visa india