செல்ஃபி எடுப்பதற்கு உலகின் ஆபத்தான நாடாக மாறிய இந்தியா - இத்தனை பேர் உயிரிழப்பா?
நீர்வீழ்ச்சி, மலை உச்சி போன்ற சுற்றுலா பகுதிகள் செல்லும் அனைவரும் செல்ஃபி எடுத்து அந்த நினைவுகளை பதிவு செய்ய விரும்புவார்கள்.
அந்த நேரங்களில் சிலர் எதிர்பாராமல் நீரின் உள்ளே விழுந்தோ அல்லது மலை உச்சியில் இருந்து விழுந்தோ உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
ரயில் தண்டவாளங்கள் முன்பு செல்ஃபி எடுத்தவர்கள் கூட ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் அதிக உயிரிழப்பு
இந்நிலையில், The Barber என்னும் சட்ட நிறுவனம், செல்ஃபி எடுக்கும் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.
இதில், மார்ச் 2014 முதல் மே 2025 ஆம் ஆண்டு வரை நடத்திய ஆய்வில், 214 உயிரிழப்புகள் மற்றும் 57 காயங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
37 உயிரிழப்பு மற்றும் 8 காயங்களுடன் அமெரிக்கா 2வது இடத்தில் உள்ளது.
18 உயிரிழப்பு மற்றும் 1 காயத்துடன் ரஷ்யா இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
16 உயிரிழப்புடன் பாகிஸ்தான் 4வது இடத்திலும், 13 உயிரிழப்பு மற்றும் 2 காயத்துடன் அவுஸ்திரேலியா 5வது இடத்திலும் உள்ளது.
மலை உச்சி போன்ற ஆபத்தான இடங்களை எளிதாக அணுகும் வசதி, இது போன்ற சாகச செல்ஃபிகளுக்கு சமூகவலைத்தளங்களில் கிடைக்கும் கவனம் போன்றவையே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |