இந்தியா- ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி நாளை தொடக்கம்
இந்தியா- ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி நாளை முதல் ஜப்பானில் தொடங்குகிறது.
இந்தியா- ஜப்பான் கூட்டு ராணுவ பயிற்சி தர்மா கார்டியன் என்றழைக்கப்படுகிறது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இப்பயிற்சி நோக்கமாக கொண்டுள்ளது.
கடந்தாண்டு பிப்ரவரி- மார்ச் மாதத்தில் இந்தியாவின் ராஜஸ்தானில் நடந்த பயிற்சி தற்போது ஜப்பானில் நடைபெறுகிறது.
நாளை முதல் ஆரம்பம்
பிப்ரவரி 24ம் திகதி முதல் மார்ச் 9ம் திகதி வரை ஜப்பானின் கிழக்கு ஃபுஜியில் நடைபெறுகிறது.
இதற்காக 120 வீரர்கள் அடங்கிய குழு ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ளது.
இப்பயிற்சியின் மூலம் இந்தியா- பசிபிக் பிராந்தியம் என்ற இருநாட்டு பரஸ்பர நோக்கத்துக்கு வலுசேர்க்கும் என்றும், உடற்தகுதி மற்றும் கூட்டு திட்டமிடலில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |