இந்தியாவிற்காக பதக்கங்களை குவித்த வீராங்கனை உயிரை மாய்த்த சோகம்
Jiu- jitsu வீராங்கனையான ரோகிணி கலாம் தனது உயிரியை மாய்த்துக் கொண்டுள்ளார்.
ரோகிணி கலாம்
Jiu- jitsu தடகள வீராங்கனையான ரோகிணி கலாம்(rohini kalam) (35), மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

பள்ளி ஒன்றில் தற்காப்புக் கலை பயிற்சியாளராக பணியாற்றி வரும் அவர், நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவரது சகோதரி, பணியிடத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருப்பார். பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் முதல்வர் அவளைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தனர்.
அவள் தொலைபேசியில் பேசும் விதத்திலிருந்தே அதை என்னால் உணர முடிந்தது" என தெரிவித்தார்.
ரோகிணி ஐபிஎஸ் ஆக ஆசைப்பட்டதாகவும், 2 வருடங்களாக விக்ரம் விருதுக்கு முயற்சித்து வருவதாகவும், இதனால் திருமணம் செய்யும் முடிவையையும் தள்ளிப்போட்டு கொண்டே வந்ததாகவும் அவரின் தந்தை தெரிவித்தார்.

மேலும், 5 மாதத்திற்கு முன்னர் வயிற்றில் ஏற்பட்ட கட்டிக்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த ரோகிணி கலாம்?
2007 ஆம் ஆண்டு ஜியு-ஜிட்சு பயிற்சி செய்யத் தொடங்கிய ரோகிணி கலாம், 2015 ஆம் ஆண்டில் தொழில்முறை ஜியு-ஜிட்சு தடகள வீரராக உருவெடுத்தார்.
ஹாங்சோவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும், பர்மிங்காமில் நடந்த உலக விளையாட்டுப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய தடகள வீரர் ஆவார்.

பாங்காக்கில் நடந்த 2022 தாய்லாந்து ஓபன் கிராண்ட் பிரிக்ஸில் 48 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கமும், அபுதாபியில் 2024 ஆம் ஆண்டில் நடந்த 8வது ஆசிய ஜுஜிட்சு சாம்பியன்ஷிப்பில் டூயோ கிளாசிக் போட்டியில் மற்றொரு வெண்கலப் பதக்கம் உட்பட பல்வேறு பதக்கங்களை இந்தியாவிற்காக வென்றுள்ளார்.
மேலும், மத்தியப் பிரதேசத்தின் ஜு-ஜிட்சு சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், இந்திய ஜு-ஜிட்சு சங்கத்தின் பெண்கள் தடகள ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |