AI Technology -க்கு மாறுவதில் உலகளவில் இந்தியா முன்னிலை: புதிய ஆய்வறிக்கை
செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பத்துக்கு (AI Technology) மாறுவதில் இந்தியா உலகளவில் முன்னிலையில் உள்ளதாக புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முன்னிலை
செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பத்துக்கு (AI Technology) மாறுவதில் இந்தியா உலகளவில் முன்னிலையில் உள்ளதாக போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் (பிசிஜி) (Boston Consulting Group (BCG) புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையில், "ஏஐ தொழில்நுட்பத்த்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருவதில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
முக்கியமாக, FinTech, Software, Banking ஆகிய துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்த்தை பயன்படுத்தி வருகின்றனர். சு
மார் 30 சதவீத இந்திய நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறியுள்ளன. இதனால், தங்களது மதிப்பை அதிகரி்த்துக் கொண்டுள்ளன.
AI திட்டங்கள் பரவலாக செயல்படுத்தப்பட்டாலும் உலகளவில் 26 சதவீத நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்தி வருகின்றன. ஆனால், இந்தியா விரைவாக AI-ஐ ஏற்றுக்கொள்வது மூலம் 30 சதவீத நிறுவனங்கள் எட்டிப்பிடித்துள்ளது.
இன்னும் இந்தியாவில் 74 சதவீத நிறுவனங்கள் ஏஐ பயன்பாட்டால் ஏற்படும் உறுதியான மதிப்பு மாற்றத்தை உணராமல் இருக்கின்றன.
உலகளவில் 4 சதவீத நிறுவனங்களின் செயல்பாடுகளில் அதிநவீன ஏஐ திறன்களை உருவாக்கி குறிப்பிடத்தக்க அளவில் தங்களது மதிப்பை அதிகரித்துக் கொண்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |