இந்திய ஜனநாயக திருவிழா தொடங்கியது! தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் வாக்குப்பதிவு ஆரம்பம்
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் இந்திய மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
தொடங்கியது இந்திய மக்களவை தேர்தல்
இந்தியாவின் 18வது மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது.
இந்த முறை இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகள், மற்ற 19 மாநிலங்களில் உள்ள 62 தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 102 தொகுதிகளுக்கு மக்களவை முதல் கட்ட தேர்தலானது நடைபெறுகிறது.
இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு சட்டப்பேரவை இடைத் தேர்தலும் நடைபெறுகிறது.
அதிகாலை 7 மணிக்கு தொடங்கியுள்ள இந்த தேர்தல் வாக்கு பதிவானது மாலை 6 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணி வரை காத்திருக்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் எத்தனை வேட்பாளர்கள்
தமிழகத்தை பொறுத்தவரை 39 மக்களவை தொகுதிகளில், 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மொத்தமாக 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன் 19.92 லட்சம் பேர் முதல் முறை வாக்களிக்க உள்ளனர், மேலும் 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |