பிறந்தநாளில் போட்டியை காண வந்த தோனி - படுதோல்வியடைந்த இந்தியா
இங்கிலாந்திற்கு எதிரான 3வது T20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்துள்ளது.
இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 3வது T20 போட்டி நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பில்ப் சால்ட் 44 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
211 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 11.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
அதிகபட்சமாக வைபவ் சூரியவன்ஷி மற்றும் இஷான் கிஷன் 13 ஓட்டங்கள் குவித்தனர். மேலும், அக்சர் படேல், அபிஷேக் சர்மா தலா 10 ஓட்டங்கள் குவித்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து தரப்பில், ஜோஷ் டாங் 4 விக்கெட்களும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்களும் கைப்பற்றினர்.

இதன் மூலம், 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ் .தோனி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், போட்டியை காண மைதானத்திற்கு நேரில் வருகை தந்தார்.
MS Dhoni having chat with fans 😍❤️
— Jeet (@JeetN25) July 7, 2026
Fans : Happy Birthday Thala 🥳
MS Dhoni : thank you (waving hand)
Fans : please play again 🥹
Dhoni : no I am getting old (signals his white beard and can't run fully) pic.twitter.com/CWVxcqvPYj
மீண்டும் விளையாட வாருங்கள் என ரசிகர்கள் கோஷமிட்ட போது, வயதாகி விட்டது எனக்கூறும் வகையில் தன்னுடைய நரைதாடியை காட்டி, வேகமாக ஓட முடியாது எனவும் சைகை காட்டினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |